tamilnadu

img

நீலகிரியில் ஊரக வளர்ச்சி பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி, பிப். 8- நீலகிரி மாவட்டம், கூட லூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில்  ரூ.7.22 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சி யர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். சேரங்கோடு ஊராட்சிக் குட்பட்ட காரக்கொல்லி பகுதியில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் வீதம்  70 பயனா ளிகளுக்கு ரூ. 2.45கோடி மதிப்பிலும், தலா ஒரு பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட புஞ்சக்கொல்லி முதல் குஞ்சமுக்கு வரை ஒருங்கிணைந்ந ஒப்படைக்கப்பட்ட வரு வாய் நிதி திட்டத்தின் கீழ்  ரூ.30 லட்சம் மதிப்பில் முடிவுற்ற சாலை பணியினை யும், பி.ஆர்.எப் காலனி முதல் கழியோடு வரை ஊரக சாலை மேம்பாட்டு நிதி திட்டத் தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் முடி வுற்ற சாலை பணியினையும், சேரங் கோடு ஊராட்சிக்குட்பட்ட கழிச்சல் முதல் மானூர் வரை பிரதான மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.05 கோடி மதிப்பில் முடிவுற்ற சாலை பணியினையும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை  மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், துறை சார்ந்த அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், மோகனகுமாரமங்கலம் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;