tamilnadu

சாலையை செப்பனிட கோரிக்கை

உதகை,நவ.15 - நீலகிரி மாவட்டம், உதகை முள்ளிகொரை  பகுதியில் 1000க்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள் ளன.மேலும், இப்பகுதியில் புகழ்பெற்ற கர்நாடக பூங்கா  உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், அதே போல் அருகில் உள்ள முத் தோரை, பாலாடா, நஞ்சநாடு  உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் போது மக்களும் நாள்தோறும் இந்த சாலையில் பயணிக்கின்றனர்.  தற்போது, இந்த சாலை குண்டும், குழியாக உள்ள தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த சாலையை செப்பனிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும்  சுற்றுலா பய ணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.