tamilnadu

img

குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி- சரிசெய்ய கோரிக்கை

உதகை,பிப்.13- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரன்சி, ஆடர்லி, கீழ் ஆடர்லி உள்ளிட்ட கிராமங்களுக்கும், டால்பின் நோஸ்,  லேம்ஸ் ராக் போன்ற முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் அவதி அடைகின்றனர்.  குன்னூர் சிஎம்எஸ் அருகிலிருந்து, 25 க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சாலை மிக மோசமான அளவில் பாதிப்படைந்து உள்ளது. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.