tamilnadu

img

சமூக பாதுகாப்பான வேலை வழங்குக வாலிபர் சங்கத்தினர் ஆவேச ஆர்ப்பாட்டம்

உதகை, பிப். 19- சமூக பாதுகாப்பான வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய அரசு அனைவருக்கும் சமூக பாதுகாப்பான வேலை வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங் கள் முழுவதும் நிரப்ப வேண்டும். நீல கிரி மாவட்டத்தில் புதிய தொழிற் சாலை தொடங்க வேண்டும். சுற்று லாவை மேம்படுத்த புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை  வலியுறுத்தி  இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் நீல கிரி மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதன் ஒரு பகுதியாக கோத்த கிரி மார்க்கெட் திடலில் செவ்வா யன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்டத் திற்கு தாலுகா தலைவர் சுந்தர் தலைமை வகித்தார். அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் வட்ட கிளைச்செயலாளர் தயாளன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் கே.மகேஷ், முன்னாள் மாவட்டச் செயலா ளர் எம்.ஏ.வினோத், கோத்தகிரி தாலுகா செயலாளர் வி.மணிகண் டன், கோத்தகிரி அரசு பள்ளி மாண வர் சங்கத்தின் கிளைத்தலைவர் விக்ரம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக ஆவேச முழக்கமிட்டனர். அதேபோல், சேரம்பாடி பஜா ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எருமாடு தாலுகா செய லாளர் உஸ்மான் தலைமை வகித் தார். முன்னாள் மாவட்ட செயலாளர் எம். ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சி. மணிகண்டன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிவப்பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மேலும்,அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் சாந்தா வாழ்த்தி பேசினார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு வேலை எனது உரிமை அதை வழங்குவது அரசின்  கடமை என கண்டன முழக்க மிட்டனர்.