tamilnadu

img

மின் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக - மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

உதகை, ஜூலை 18 – நீலகிரி ஆடாவேலி எஸ்டேட் டில் அரசின் மெத்தனப் போக்கால் மின்விபத்தில் பலியான மங்கம்மா என்ற இளம்பெண்ணின் குடும் பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குன்ன கம்பை அருகே உள்ள ஆடாவேலி எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த மங்கம்மாள் என்ற இளம்பெண் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று வீட்டருகில் உள்ள கம்பியில் துணியை காய வைக்க முயன்றபோது மின்வாரி யத்தின் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந் தார்.

இவரது அலறல் சத்தத்தைக் கேட்டு காப்பாற்ற முயன்ற அவரின் சகோதரர் திருப்பதி மற் றும் பக்கத்து வீட்டு சிறுமி சரண்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். தற்போது இவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர்.  முன்னதாக, இந்த விபத்து நடைபெறுவதற்கு முந்தைய நாளில்தான் மின்வாரிய ஊழியர் கள் அங்கு மீட்டர் போர்டு இடம் மாற்றம் செய்து சென்றுள்ளனர்.

அப்போது மின்சாரப் பணிகள் மேற்கொள்ளும்போது கடை பிடிக்க வேண்டிய அடிப்படை யான மின் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் மின்வாரியத்தால் பின்பற் றப்படாததன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடைபெற் றுள்ளது.

ஆகவே, மின் விபத்தில் பலியான மங்கம்மாள் குடும்பத் துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி வெள்ளியன்று உத கையில் உள்ள மின்வாரிய மேற் பார்வைப் பொறியாளர் அலுவ லகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெ.ஆல்தொரை தலைமை  தாங்கினார்.

உதகை இடைக்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அடையாள குட்டன், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் குழு உறுப்பினர் ஏ.நவீன் சந்திரன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் நிர்வாகி வி.ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன்பின் மின்வாரிய மேற் பார்வைப் பொறியாளர் வாசு நாயர் பிரவீன்குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது.

;