tamilnadu

img

அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடுக

மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம், நவ.11- சாலை, தெருவிளக்கு உள் ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி சூரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது . சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி கிராமம் பனங்காட்டூர், காட்டுவளவு, பள் ளக்கானூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சாலை, தெருவிளக்கு வசதிகள் முறையாக மேற்கொள் ளப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். குறிப்பாக, பனங்காட் டூர் முதல் சஞ்சீவியூர் வழி  ஜலகண் டாபுரம் வரையிலும், பனங்காட்டூர் முதல் பணக்காரன்  ஊர் வரையிலும் முறையாக தார் சாலை அமைக்க வேண்டும். இப்பகுதிகளில் மழைக் காலங்களில் மழை நீர் அதிகம்  தேங்கி அப்பகுதி முழுவதும் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகி றது. இதனை சரி செய்ய போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனங்காட்டூர் பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சூரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு கிளை செயலாளர்கள் டி. விஜயகலா, கே.ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மேவை. சண் முகராஜா, மாவட்டக் குழு உறுப் பினர் கே.ராஜாத்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.வெங்டேசன், வாலிபர் சங்க செயலாளர் கனக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.