உதகை, மார்ச் 12- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை விழாவையொட்டி தொடங்கப்படும் மலர் கண்காட் சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கப்படும் மலர் கண்காட்சி நிகழ்ச்சியின் முதல் சீசனும், செப்டம் பர், நவம்பர் மாதங்களில் இரண்டாவது சீசனும் நடை பெறவுள்ளது. இந்நிலையில் கோடை சீசனுக்கு உதகை வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலைத் துறையினர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.குறிப்பாக, உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சி விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்ப டுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அரசு தாவரவியல் பூங்காவில் கோடைவிழாவை முன்னிட்டு நடைபெ றும் மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, சைக்ல மன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரனுன்குலஸ் உள்ளிட்ட புதிய ரகம் மற்றும் ஆர்ன மென்டல் கேல், கேலா லில்லி, ஓரியன்டல் லில்லி, மைமுலஸ், ஸ்கேபியோசா, கலிபோர்னியா பாப்பி உள்ளிட்ட 400 வகை விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.