tamilnadu

img

நீலகிரி: பொது வேலை நிறுத்த பேரெழுச்சி

உதகை, ஜன.8 - நீலகிரி மாவட்டம் முழுவதும் மத் திய அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் மற்றும் மறியல் போராட் டங்களில் ஈடுபட்டனர்.  உதகையின் ஏடிசி பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ் தலைமை தாங்கினார். ஏஐ டியுசி மாவட்ட செயலாளர் கே.மூர்த்தி, எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலா ளர் என். ஜெயராமன், சிபிஎம் உதகை இடைக்கமிட்டி செயலாளர் எல்.சங்கர லிங்கம், ஸ்டெர்லிங் பயோடெக் ஊழி யர் சங்கம் சிஐடியு நிர்வாகி எஸ்.ராஜ ரத்னம், சிபிஐ கட்சியின் சுப்பிரமணி, ஊராட்சி பணியாளர் சங்க நிர்வாகி துரை, தோட்டக்கலை பண்ணை பணி யாளர் சங்க நிர்வாகி கருணாகரன் ஆகி யோர் பங்கேற்று கைதாகினர். மஞ்சூர் பஜாரில்  நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர்  ஜெ.ஆல் தொரை , ஏஐடியுசி ஆரி ஆகியோர் தலைமை தாங்கினர். மின்வாரிய மத் திய அமைப்பின் குந்தா கோட்ட செய லாளர் முரளி, சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.நவீன் சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் அலியார், சாக்கி, வர லட்சுமி, ருத்ரன், என்.எல்.சுப்பிரமணி,   ஏஐடியுசி ரகுநாதன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்று கைதாகினர். குன்னூர் விபி தெருவில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு ஏஐ டியுசி மாவட்ட தலைவர் பி.போஜராஜ், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் முகமது ரபிஃக் ஆகியோர் தலைமை  தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைதாகினர். கோத்தகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு எல்பிஎப் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் செல்வராஜ், சிஐ டியு மாவட்ட தலைவர் கே. சுந்த ரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியுசி போக்குவரத்து தொ ழிலாளர் சங்கத்தின் பொது செயலா ளர் இப்ராஹிம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோத்தகிரி இடைக்க மிட்டி செயலாளர் வி.மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. மகேஷ், நீலகிரி மாவட்ட மரம் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் முருகேசன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் இடைக் கமிட்டி தலைவர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைதாகினர். இதேபோல் கூடலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கூடலூர் இடைக்க மிட்டி செயலாளர் எம்.ஏ.குஞ்ஞி முகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு, மாவட்டகுழு உறுப்பினர் லீலா வாசு, எல்பிஎப் மண்டல பொது செயலாளர் நெடுஞ்செழியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் இடைக்கமிட்டி செயலா ளர் சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். பந்தலூர் பஜாரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்ஹனீபா மாஸ்டர், எருமாடு இடைகமிட்டி செயலா ளர் கே.ராஜன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ. யோகண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள்அமீது மாஸ்டர், பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் மறியலில் ஈடுபட்டு கைதாகி னர். டாஸ்மாக் சுமைப்பணி தொழிலா ளர்கள் புதனன்று குன்னூரில்உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு டாஸ்மாக் சுமைப்பணி  தொழிலாளர் சங்கத்தின் தலை வர் ரங்கசாமி தலைமை வகித்தார்.  செயலாளர் விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேலைநிறுத் தத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

;