tamilnadu

img

கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற பூங்காவில் மரக்கன்றுகள் நடவு விழா

உதகை,ஜூன் 25- உதகையில் கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற  பூங்காவில் புதனன்று மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்டது. உதகை அருகே உள்ள குருத்துகுளி பகுதியில் கால்நடை துறைக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலத் தில் கடந்த 2002ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹூ முயற்சியால் 42 ஆயிரத்து 182 மரக்கன்று நடப்பட்டது. இதற்காக, 2002 ஜூன், 24 ஆம் தேதி கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அச்சாதனை தினமான புதனன்று பூங்காவுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக  மீண்டும் 250 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்நி கழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாவட்ட ஆட் சியரும், தற்போதைய மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹூ மரக் கன்றை நடவு செய்து பேசும்போது, கின்னஸ் சாத னையில் இடம் பெற்ற இந்த பூங்காவுக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்பதற்காக மரக்கன்று நடவு செய் யப்படுகிறது. எனவே அனைத்து தரப்பினரும்  முழு ஒத்துழைப்பு கொடுத்து இப்பூங்காவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்ட  அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;