tamilnadu

img

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

உதகை, மே 23-நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றதையடுத்து திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் ஆ.ராசா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அவர்தொடர்ந்து முன்னணியில் இருந்தார். வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட கூடுதலாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தல் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலரும் ராசாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இவரது வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியைக் வெளீப்படுத்தினர்.
 சிபிஎம் வாழ்த்து
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசாவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரிமாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வாசு, ஜே.ஆல்தொரை உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

;