tamilnadu

img

மின்வாரிய தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகை, அக்.6 - உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கண்டித் தும், மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குந்தா, மாயார்,சிங்காரா ஆகிய பகுதிக ளில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் மின்வாரிய தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கிருஷ்ணன், தொமுச நிர்வாகி நஜூபுதீன், ஐக்கிய தொழிலாளர் பொறியாளர் சங்கத்தின் செயலா ளர் வே.ஜெயகுமார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு குந்தா  கோட்டத் செயலாளர் முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

தருமபுரி
தருமபுரி மாவட்டம், மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  மாவட்டதலைவர்  டி.லெனின்மகேந்திரன், ஏஐசி சிடியு மாநில தலைவர் முருகன்,  பொறியாளர் சங்க மாவட்ட தலை வர் ஆர்.சுந்தர மூர்த்தி, சிஐடியு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் ஜி.பி. விஜியன், எல்பிஎப் மாவட்டசெய லாளர் சக்திவேல், பொருளாளர் சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் லோகநாதன், செயலா ளர் முரளி, ஐக்கிய சங்க செயலாளர் மேனாக  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.