உதகை, நவ. 11 - டேன்டீ நிறுவனத்தில் பணிபுரி யும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு 20 சதம் போனஸ் வழங்க வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்க கூட்டு குழுவினர் உண்ணாவி ரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி 20 சதவிகிதம் போனஸ் வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு கொரோனாவை கார ணம் காட்டி அதை 10 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனைக் கண் டித்தும், 20 சதவிகித போனஸ் வழங்கக் கோரியும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் புதனன்று நடைபெற்ற போராட் டத்தில், கூடலூர் சட்டமன்ற உறுப் பினர் திராவிடமணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் எம்.எம். ஹனிபா மாஸ்டர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராஜேந்திர பிரபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, குன்னூரில் இயங்கி வரும் தலைமை மேலா ளர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆ.ராசா மனு இதற்கிடையே, அரசு டேன் டீ நிறுவனத்தில் பணிபுரியும் தோட் டத் தொழிலாளர்களுக்கு 20 சத விகித போனஸ் வழங்க வேண்டு மென வலியுறுத்தி நீலகிரி மக்க ளவை உறுப்பினர் ஆ.ராசா, டேன் டீ நிர்வாக இயக்குநரை சந்தித்து மனு அளித்தார். மேலும், பணி கொடை, மருத்துவபடி, மருத்துவ விடுப்பு ஊதியம், விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கிட வேண்டு மென்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.