tamilnadu

கோத்தகிரி: பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

நீலகிரி, ஜூன் 5- கோத்தகிரி வட்டத்திற்குட்பட்ட பகு திகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல் வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஆருவ ஒச ஹட்டி, பெட்டட்டி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைப்ப தையும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுகுலா ஊராட்சிக்குட்பட்ட கீழ்ஓடன் முதல் ஜக்கொம்பை பகுதி வரை ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ் சிதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், ஜெயபால், கோத்தகிரி வட்டாட்சியர் மோகனா, செயல் அலுவலர் மணிகண்டன், நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;