tamilnadu

img

நிதியை வெட்டுவதாக மிரட்டல்

கொரோனா தோல்வியை மறைக்க உலக சுகாதார அமைப்பின் மீது டிரம்ப் பாய்ச்சல்

வாஷிங்டன், ஏப்.15- கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உலக சுகாதார நிறு வனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்த ரவிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதா வது:-

அமெரிக்கா அளிக்கும் நிதியை உலக சுகாதார நிறுவனம் சிறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்பது குறித்து எனக் கும் தனது அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலை கள் உள்ளது. உலக சுகாதார அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்று உள் ளது, அதற்கு அதுவே பொறுப்பேற்க வேண் டும். கொரோனா பரவல் தொடர்பில் சீனா அளித்த தவறான தகவல்களை அந்த அமைப்பு முன்னிலைப்படுத்தி உள்ளது. இல்லை எனில் உலக நாடுகள் கண்டிப்பாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். 

சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த துல்லி யமான தகவல்கள் சரியான நேரத்தில் பகிரப் படுவதை உறுதிசெய்ய நாடுகளுடன் இணை ந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பை உலகம் சார்ந்துள்ளது. அதன் வெளிப்படை யான தோல்விகளுக்கு அமைப்பு பொறுப் பேற்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப் பதை தற்காலிகமாக நிறுத்துமாறும் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியா குடிரெஸ் கூறும் போது உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது தொற்று நோயை எதிர்த்துப் போராடும் வேறு எந்த அமைப்பிற்கோ நிதியைக் குறைப்பதற்கு இது தகுந்த நேரம் அல்ல. இந்த வைரஸை யும் அதன் விளைவுகளையும் தடுக்க ஒற்று மைக்காகவும் சர்வதேச சமூகம் ஒற்றுமையுட னும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது எனக் கூறியுள்ளார்.

;