tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் சர்வதேச விமான ங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே ரயில்வே துறையால் இயக்கப்படும் ரயில்களுடன் கூடுதலாக 151 ரயில்களை தனியார் துறை பங்களிப்புடன் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் 1,500 ஹெக்டே ரில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகா வாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரத மர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு 4 மாதங் களாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 70 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 83.63 ஆகவும் டீசல் ஒரு  லிட்டர் ரூ.77.91-க்கும் விற்பனை யாகிறது.

நாடு முழுவதும் ஐசிஎஸ்இ/ஐஎஸ்சி 10,12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளன.www.cisce.org இணையதளத்தில் தேர்வு முடிவு களை அறிந்துகொள்ளலாம்.

டிக்டாக்கிற்கு பதிலாக மாற்று  செயலியை அறிமுகப்படுத்தி யுள்ளனர் திருப்பூர் மாவட்ட பட்டதாரிகள்.

பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத அமெரிக்கா வுடன் இனி எந்தப் பேச்சும் நடத்த வேண்டிய தேவை இல்லை என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.