தென்னாப்பிரிக்காவின் மேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் முக்கியத்துவம். வாய்ந்த இடம். இவற்றை ப்லோம்போஸ் குகைகள் என்பார்கள். இது இயற்கை பாதுகாப்பிடம் இங்கே. சுண்ணாம்பு பாறைகளில் உட்கூடாக சுமாராக 50 சதுர மீட்டரில் அமைந்துள்ள இடங்கள் உள்ளன. இந்த இந்துப் பெருங்கடல் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்ட தூரமும், கடல் மட்டத்திற்கு மேலே, சுமார் 35 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இதனை 2007ல் எரிக்கோ & ஹென்ஷில்வுட் (d’Errico and Henshilwood, 2007) என்ற ஆராய்ச்சியாளர்கள் இருவரும் கண்டுபிடித்தனர். இங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாம், ஆப்பிரிக்காவின் மத்திய கற்காலத்தில், அதாவது ஐரோப்பாவின் மத்திய பழைய கற்காலத்தை ஒட்டியதும் கூட. இங்குள்ள விலங்குகள் மற்றும் நவீன மனித ர்களின் வாழிடமாக மாறி இருந்துள்ளது.ஆனால் இவர்கள் தங்கள் தொழிலாக மீன்பிடித்தலைக கொண்டிருந்தனர். மீன் பிடி தொழில்தான் மனிதனின் முதல் தொழிலும் ஆகும். அத்துடன் ஓடு உள்ள மீன்களையும் பிடித்தனர்.
மேலும் இங்கு வாழ்ந்த நவீன மனிதன். சிறிய, பெரிய தரை வாழ் மற்றும் கடல் பாலூட்டிகளை வேட்டையாடி இருந்துள்ளனர். மேலும் இப்பகுதியில், துளையிடப்பட்ட நத்தை ஓடுகள், ஏராளமான எலும்புகள், எலும்பாலான கருவிகள் கற்கள், காணக்கிடைக்கின்றன. அத்தோடு ஆயிரக்கணக்கிலான சிவப்பு காவிகற்கள் அங்கு கிடைத்தன. அங்குள்ள கருவிகளை நினைக்கும் போதும், அதில் பதிவுகள், மனிதவியல் துறை சார்ந்த பல தகவல்கள் கிடைக்கின்றன. இவைகளைப் பார்க்கும்போது இங்குள்ள பொருட்கள் இங்கே கொஞ்சம் நாகரிகமான மனிதர்கள் வாழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.மேலும் இங்கு எலும்பு மற்றும் காவிக்கறைகளில் பொறித்து வைக்கப்பட்டுள்ள குறியீடுகள் இவர்கள் மற்ற இடங்களில் வாழ்ந்தவர்களைவிட நவீனமானவர்கள் என்றும் கூட தெரிகிறது. இங்கேதான் ஐரோப்பாவின் முதல் நவீனத்துவம் தோன்றியிருக்கலாம் என்ற கருத்ததோட்டமும் நிலவுகிறது.