tamilnadu

img

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


தைவானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் காரணமாகத் தலைநகர் தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். 30 நொடிகள் வரை நிலநடுக்கம் நீடித்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 


இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தற்போது வரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.


;