tamilnadu

img

பட்டியலின மாணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை

துபாய்:
கேரள மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் அரபு நாட்டில் மேற்கொண்டுள்ளார். 
கேரள அரசு செயல்படுத்திவரும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் பயிற்சி பெற்ற பணிநாடுவோருக்கானவேலைவாய்ப்புக்கான முயற்சி இது. வெளிநாடுகளில் சுயமுயற்சியில் வேலை தேடிக்கொண்ட பட்டியலின இளைஞர்களையும் அமைச்சர் சந்தித்து இதுகுறித்து பேச உள்ளார். 

வங்கி, காப்பீடு, ஐடி, சுகாதாரம், நிதி நிர்வாகம் போன்ற துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை பெற்றுத்தரவும் அமைச்சர் முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் அதிபர்களின் கூட்டம் திங்களன்று கிராண்ட் மில்லியன் ஓட்டலில் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். அமைச்சருடன் பட்டியலின வளர்ச்சி த்துறை இயக்குநர் அலி அஸ்கர்பாஷா இந்த கூட்டத்தில் பங்கேற்றார். பணிநாடுவோர் வெளிநாட்டு வேலைக்கு செல்வது வரையிலான செலவுகளை அரசு ஏற்கும் என அமைச்சர் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக அமலாக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம் மூலமாக 2358 இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். தற்போது 234 பேருக்கு இந்த திட்டத்தின்படி வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது. 1300 பேருக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என அரசு கருதுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த மாதம் 17ஆம் தேதி அபுதாபி கிராண்ட் மில்லியன் ஓட்டலில் மீண்டும் ஒரு தொழில் அதிபர்களின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

;