tamilnadu

img

ஜப்பானில் மரண தண்டனைக்குப் பெருகும் ஆதரவு 

டோக்கியோ 
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் மரண தண்டனை குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்நாட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது வழக்கம். சமீபத்திய கருத்துக்கணிப்பு 2019-ஆம் ஆண்டு நவம்பர் (7-முதல் 17-ஆம் தேதி வரை) மாதம் நடைபெற்றது. 18 வயதைக் கடந்த 3 ஆயிரம் பேர் பங்குபெற்ற இந்த கருத்துக்கணிப்பின் முடிவை ஜப்பான் அரசு சனியன்று வெளியிட்டது. ஜப்பான் மக்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதிகள் இந்த முடிவை எதிர்பார்த்த நிலையில், 80.8 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவாக கருத்து  தெரிவித்துள்ளனர். வெறும் 8.2 சதவீத மக்கள் மட்டுமே மரண தண்டனை எதிராக வாக்களித்துள்ளனர்.மொத்தத்தில் 58 சதவீதத்துக்கும் அதிகமானோர் மரண தண்டனையை ஒழிப்பதால், கடுமையான குற்றங்கள் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

;