tamilnadu

img

இன்னும் 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் அழிந்து விடும்...  உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

ஜெனீவா
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா எனும் ஆட்கொல்லி வைரஸ் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை எற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளுடன் இருக்கும் வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை ஒழிக்க முடியாமல் அதனுடன் போராடி வருகிறது. சில நாடுகளில் கொரோனா ஓரளவு  ஒழிந்து மீண்டும் 2-ஆம் அலையை தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் இன்னும் 2 ஆண்டுகளில் ஒழிந்து விடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கெப்ரியாசிஸ் கூறியதாவது; 

கொரோனா வைரஸ் என்பது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் சுகாதார  பிரச்னையாகும். கடந்த 1918-ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல் பரவிய வேகத்தைவிட, கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு உலகமயமாக்கல், மக்கள் நெருக்கம், நெருங்கிய தொடர்பு, போக்குவரத்து ஆகியவை அனுமதி அழிந்துவிட்டன. ஸ்பானிஷ் ப்ளூ பரவியபோது குறைந்த அளவு தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருந்ததால் அந்த வைரஸை விரைவாக கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் காலத்தில் நவீன தொழில்நுட்பம், மருத்துவக் கண்டுபிடிப்புகள் அதிகளவில் இருப்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கொரோனா வைரஸை நாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும் என நம்புகிறேன்.  இதற்கு அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி இருந்தால் தான் இந்த நம்பிக்கை சாத்தியமாகும்" என அவர் கூறியுள்ளார். 

;