திருவனந்தபுரம்:
கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் கேரள முதல்வர் உரிய நேரத்தில் தலையிடுவதும், தினசரி நடத்தும் ஊடக சந்திப்பும் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என தி இந்து நிறுவன தலைவர் என்.ராம் தெரிவித்துள்ளார்.கேரளத்தில் கோவிட் நோயை கட்டுப்படுத்தவும் மரண விகிதத்தை குறைக்கவும் முதல்வரின் தலையீடு வழிவகுத்து வருவதாகவும், தவறாக ஒரு நகர்வுகூட இல்லாமல் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கேரள அரசின் தகவல் மக்கள் தொடர்புத் துறை வெளியிடும் ஆங்கில மாத இதழான ‘கேரள காலிங்’ இல் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இதழில் பிரபல ஓவியர் போஸ் கிருஷ்ணமாச்சாரி, கவிஞர் சச்சிதானந்தன், பொருளாதார நிபுணர் - மானுடவியலாளர் டாக்டர் ஜெய்சன் ஹிக்கல் உள்ளிட்டோர் கோவிட் பின்னணியில் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.