tamilnadu

img

கொரோன வைரஸ் எதிரொலி...  செல்ல பிராணிகள் இறைச்சிக்குத் தடை

சென்ஜென்
புதிய வகை ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் தற்போது உலகையே தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வருகிறது.  

இந்த கொரோனா வைரஸ் சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 2500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், கடந்த வாரத்தை விட நடப்பு வாரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்குப் பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதனை ஏற்றுக்கொண்ட சீன அரசு தொடக்கத்தில் வுஹான் நகரில் பாம்பு, வவ்வால் இறைச்சிகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்ஜென் நகரில் நாய், பூனை இறைச்சிகளை விற்பனைக்கும், உண்பதற்கும் உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பிராணிகளையும் செல்ல பிராணிகளாக வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;