tamilnadu

img

தென் ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்...  தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டுகிறது... 

கேப் டவுன்
ஆப்பிரிக்கா கண்டத்தின் தென் பகுதி எல்லையாக உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா. அனைத்து வளமும் பெற்றுள்ள இந்த நாடு ஆப்பிரிக்கா கண்டத்தின் தற்போதைய கொரோனா மையமாக உள்ளது. 

கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே இங்கு வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது பரவல் வேகம் மேலும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக அந்நாட்டில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் இருக்கும். ஆனால் ஜூன் மாத இறுதியில் இருந்து தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன் புதிய உச்சமாக ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 2 லட்சத்தை (1.96 லட்சம்) நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 173 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,199 ஆக உயர்ந்துள்ளது. 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்து எகிப்து, நைஜீரியா, கானா ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு இல்லாத கண்டமாக இருந்த ஆப்பிரிக்காவில் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

;