மாஸ்கோ
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா ஐரோப்பா கண்டத்தில் உள்ளது. இங்கு குளிர் சீதோஷ்ண நிலவி வருவதால் கொரோனா பரவல் கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ளது. இங்கு குளிர் சீதோஷ்ண நிலவி வருவதால் கொரோனா பரவல் கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் ரஷ்யாவில் 7 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 5 லட்சத்து 76 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 161 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது. 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
உலகளவிலான கொரோனா பாதிப்பு அட்டவணையில் ரஷ்யா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளது.