tamilnadu

img

அசோக் குடும்பத்திற்கு சிபிஐ(எம்எல்) நிதி வழங்கல்

திருநெல்வேலி, ஆக 8- நெல்லை கரையிருப்பில் சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக்கின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிதி வழங்கியுள்ளது. சாதியாதிக்கத்தால் படுகொலை யான புரட்சிகர இளைஞர் கழக மாரி யப்பனின்  3ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் வாலிபர் சங்க  அசோக் குடும்பத் திற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது, நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர் எம்.சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார்.

பேச்சிராஜா, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியின் (சிபிஐ  - எம் எல்) மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ்துவக்கவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசிய துணைத் தலைவர்  சீதா, மாநிலத் தலைவர் திருமேனி நாதன், தேசியக்குழு உறுப்பினர் ராஜேஷ், ஏ.ஐ.சி.சி.டி.யு  மாவட்ட பொதுச் செயலாளர் கே.கணேசன், தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் டி.தாவூதன், சலவையாளர் சமுதாய முன்னேற்ற நலச் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.  நிகழ்ச்சியில், கரையிருப்பில் சாதியாதிக்கத்தால் படுகொலையான அசோக்கின் குடும்பத்திற்கு புரட்சிகர இளைஞர் கழகத்தின் சார்பாக நிதி ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டது. அதைஅசோக் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.   நிகழ்ச்சியில் சி.பி.எம் தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.