tamilnadu

img

டெங்கு கொசு பரவும் அபாயம்: ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல், ஜூலை 21- நாமக்கல்லில் பரவலாக மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் அதை  தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி யுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்து வருவதால் மழை  நீரானது வீடுகளை சுற்றிலும், வீடுக ளின் மேற்பகுதிகளிலும் தேங்கு வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் காய்ச்சலை ஏற்படுத்தும் டெங்கு கொசு கள் உற்பத்தியாகும் வாய்ப்புகளும் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.  எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள்  மற்றும் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கும் வகை யில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன் றவை இருப்பின் அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், அனைத்து அரசு  மற்றும் தனியார் நிறுவ னங்கள், பள்ளிகள், கல்லூ ரிகள், விடுதிகள், தொழில்  நிலையங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், காலிமனை கள், பயன்பாட்டில் இல்லாத  வீடுகள், திரையரங்குகள்,  திருமண மண்டபங்கள், பேருந்து  மற்றும் ரயில் நிலையங்கள் உள் ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

;