நாமக்கல், நவ.14- இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசா ணையை (எண்.56) ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் வியாழனன்று திருச்செங் கோட்டில் நடைபெற்றது. இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசா ணையை (எண்.56) ரத்து செய்திட வேண்டும். காலியாக உள்ள 4.5 லட்சம் அரசு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழியர் கள் சங்கம் சார்பில் தமிழ கத்தில் ஐந்து முனைகளிலிருந்து துவங்கிய பிரச்சார இயக்கம் வியாழனன்று திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்தடைந்தது. இங்கு நடைபெற்ற பிரச்சாரத் திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கு. ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செய லாளர் எஸ்.கதிர்வேல் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜ குமார், மாநில துணைத்தலைவர் மு.சீனிவாசன், மாநிலச் செய லாளர் பி.பரமேஸ்வரி, நாமக்கல் மாவட்ட செயலாளர் ஆர்.முரு கேசன் உட்பட பலர் கோரிக்கை களை விளக்கி பேசினார்கள். முடிவில் வட்ட பொருளாளர் என்.தனசேகரன் நன்றி கூறினார்.