tamilnadu

img

பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முற்றுகை

நாமக்கல், ஜன.9- நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் நியாயவிலை கடை யில் பொங்கல் பரிசு தொகை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் வியாழனன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர்.  தமிழக அரசு பொங்கல் பரிசுத்  தொகுப்பு வியாழக்கிழமை முதல்  வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் எலச்சி பாளையம் பகுதியிலுள்ள அகரம் ரேசன் கடையில் வயதான முதி யோர்களுக்கும், சர்க்கரை வாங்கும்  அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடியாது என ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சு. சுரேஷ் தலைமையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்த தகவலறிந்த எலச்சி பாளையம் காவல்துறையினர் சமரசம் செய்து சம்பந்தப்பட்ட துறை  அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதை யடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென் றனர். இந்த முற்றுகை போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பி.சுரேஷ், கே.எஸ்.வெங்க டாசலம்,  ஆர்.ரமேஷ் மற்றும் பி. கிட்டுசாமி, எஸ்.செல்வராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செய லாளர் மாதேஸ்வரனிடம் பொது மக்கள் கோரிக்கை மனுவினை வழங்கினர். இம்மனுவை பெற்றுக் கொண்ட கூட்டுறவு செயலாளர் மாதேஸ்வரன் கூறியதாவது, வயதா னவர்கள், சர்க்கரை அட்டை உள்ள வர்கள் மற்றும்  அரிசி வாங்காதவர் களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்  வழங்க இயலாது. இதுபோன்ற அட்டைகளுக்கு வழங்க வேண்டாம்  என அரசு தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது என கூறினார். இதுகுறித்து மூதாட்டி ஜெக தாம்பாள் என்பவர் கூறியதாவது, இன்று பொங்கல் பரிசு வழங்குவ தாக தகவல் தெரிவித்தனர். இத னால் அதிகாலை 5 மணி முதல்  ரேசன் கடையின் முன்பு வரிசையில்  நின்று மதியம் 12 மணிக்கு மேல் எனக்கு பொங்கல் பொருட்கள் வழங்க முடியாது எனக் கூறி விட்டனர். எனது கணவரும், மகனும் இறந்து விட்டனர். இத னால் ஆதரவற்ற நிலையில்  உள்ள எனக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் மிகவும்  சிரமமாக உள்ளது. என்னை போன்றவர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க முடியாது  என கூறுவது வேதனையாக  உள்ளது என கண்ணீர்விட்டு கூறினார். இதேபோல் தங்கம்மாள் என் பவர் கூறியதாவது, ரேசன் கடைக்கு  வரிசையில் நின்று சுமார் 5 மணி நேரத்திற்கு  பிறகு கடை ஊழியரிடம் எனது ரேசன் அட்டையை காண் பித்து பதிவு செய்தேன். பின்னர் கை ரேகையும் பெற்றுவிட்டு எங்களுக் கான பரிசுத்தொகை விநியோக பதி வேட்டில் பதிவு செய்தனர். பின்னர் உங்களுக்கு வழங்க முடியாது என  கூறிவிட்டனர். இதுகுறித்து ஏன்  என கேட்டதற்கு சர்க்கரை வாங்கும்  அட்டைகளுக்கு கிடையாது என  கூறிவிட்டனர் என வேதனை யோடு தெரிவித்தார்.

;