tamilnadu

img

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒருவர் கைது

குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பா நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா மற்றும் ஈரோட்டை சேர்ந்த செவிலியர் பர்வின்  கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் பேசிய அமுதா, குழந்தைகளின் கலருக்கு ஏற்பவும் பெண்குழந்தை என்றால் சுமார் 3லட்சமும் ஆண் குழந்தையென்றால் சுமார் 4 லட்சம் வரையும் விலை பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன், 70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளார். அவரிடம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அமுதாவிடம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கொல்லிமலை வாழவந்தி நாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனை கைது செய்த ராசிபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


;