tamilnadu

img

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.7- தார்ச்சாலை அமைக்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் குமாரபாளை யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து அரசு மேல் நிலைப்பள்ளி வரையிலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும்  சாலையில்  கேபிள் வயர் அமைக்கும்  பணியும் நடைபெற்றது. சாக்கடை கால்வாய் செல்ல பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதற்காக தார்ச்சாலையை பொக்லைன் மூலம்  தோண்டப்பட்டது. தற்போது  வரை  இச்சாலை செப்பனிடாததால்  பொதுமக்கள், பள்ளி மாணவர்கள்  மற்றும் வாகன ஓட்டிகள்  உள்ளிட் டோர் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.  இச்சாலையை ஆமை வேகத் தில் செப்பனிடும் பணியை மேற் கொள்ளும்  நகராட்சி அதிகாரிகளை  கண்டித்து சனியன்று குமார பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில்  நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு,  7ஆவது வார்டு  கிளைச் செயலாளர் காந்தி  சரவணன் தலைமை வகித்தார்.  நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள் என்.சக்தி வேல், கே.பாலுசாமி, என்.காளி யப்பன், தனலட்சுமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக நகர குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.  முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடை பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவிப்பு வெளியிட்ட  உடன் நகராட்சி சார்பில் தார்ச் சாலை செப்பனிடும் பணி துரித மாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.