நாமக்கல், மார்ச் 7- கொரோனா பாதிப்பு பீதி காரணமாக கறிக்கோழி விலை சரிந்துள்ளது. கோழிப் பண்ணைகளில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாகவும், இதனால் கறிக்கோழிகளை மக்கள் சாப்பிட வேண் டாம் என்றும் வாட்ஸ் - அப் குரூப்களில் தகவல்கள் பரவி வருகிறது. இதனால் பொது மக்கள் கறிக்கோழி வாங்கி சாப்பிடுவதை குறைக்க ஆரம்பித்து விட்டனர். இதன் காரணமாக கறிக்கோழி விற்பனை சரிந்து கொண்டே வருகிறது. நாமக்கல் மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் ஏராளமான கறிக்கோழிகள் உற் பத்தி செய்யப்பட்டு தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. பல்லடத்தில் மொத்தம் 3 ஆயிரம் கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் 10 லட்சம் கிலோ கோழி உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா பீதி காரணமாக பல்லடத்தில் 1 கிலோ கறிக்கோழி விலை ரூ. 51 ஆக குறைந்துள்ளது. இதேபோல் நாமக் கல்லில் ரூ.61-க்கு விற்கப்பட்ட கறிக்கோழி விலை 50 ரூபாயாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 11 ரூபாய் குறைந்ததால் கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். கறிக்கோழி மொத்த கொள்முதல் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர் விலை சரிவு காரணமாக கறிக்கோழி உற் பத்தியை குறைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள் முதல் விலை 328 காசுகளாக இருந்தது. இதற்கிடையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட் டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 308 காசுகளாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறும் போது, கோடை காலங்களில் முட்டை விலை குறைவது வழக்கமான ஒன்று தான். கொரோனா வைரஸ் பீதி காரணமாக விலை குறையவில்லை என்று கூறினார்கள்.