நாகை:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமீமுன் அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தார்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ செய்தியாளர் களை சந்தித்தார் அப்போது, "உச்சநீதிமன்றம் அளித்த கருத்தின்படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கும், பன்நோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி இருக்கிறது. அதனால் தமிழக ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை யும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.
ஆளுநர் தாமதித்தால் உடனடியாக தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளையும் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர்அமைச்சர்கள் கொண்ட குழுவை கூட்டி ஆணை பிறக்பிக்க ஆவன செய்யவேண்டும்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் உரிய தண்டனைகாலத்தை விட அதிமாக தண்டனையை பெற்றுள்ளனர்.இனியும் தாமதித்தால் 'கெட்அவுட் கவர்னர்' என்ற முழக்கத்தோடு தமிழ்நாட் டில் இருக்கக் கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேரக்கூடிய சூழல் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆளுநரின் கடமை: கி. வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு அனுப் பப்பட்ட கோப்பு, அப்படியே கிடப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பது தாமதிக்கப்பட்ட நீதியாகும்.உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டி அதன் அடிப்படையில், மேலும் காலதாமதம் இன்றி அந்த எழுவர் விடுதலைக்கான கோப்பில் உடனே ஒப்புதல் அளித்து,
மாநில அரசின் உரிமையையும், மனிதாபிமானத்தையும் மதிக்கவேண்டியது தமிழக ஆளுநரின் அவசரக் கடமையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.மீண்டும் அழுத்தம் கொடுத்து, ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டியது அதைவிட தேவையான அவசரக் கடமையாகும் எனவும் வீரமணி குறிப்பிட்டுள்ளார்.