tamilnadu

குமரியில் கடல் உள்வாங்கியது 2 மணி நேரம் படகுகள் நிறுத்தம்

நாகர்கோவில், மே 20-சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்தசுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். தற்போதுகோடை விடுமுறை என்பதால், குமரியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை, படகில் சென்று பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் திங்களன்று அதிகாலை முதல் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. கடல் நீர்மட்டம் சீரானபின்னரே, படகு சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

;