tamilnadu

img

இடமாறுதலை ரத்து செய்யக் கோரி போராட்டம்...

நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதனன்று காலை தோவாளை, அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 கிராம நிர்வாக அலுவலர்கள் வந்தனர். திடீரென அவர்களுக்குஇடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதை கண்டிப்பதாக கூறிஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறைப்படி பொது கலந்தாய்வு வைத்து இடமாறுதல் வழங்க வேண்டும். இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் மயில் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம்செய்தார்.