நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி (27).இவர் முகநூல் மூலம் பல பெண்களிடம் நெருங்கி பழகி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிபணம் பறித்துள்ளார்.
இதுதொடர்பாக காசிமீது முதல்முதலாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அதை தொடர்ந்து மேலும் சில இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். இதையடுத்துஅவர்மீது நேசமணிநகர் ,நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்துமகளிர்காவல்நிலையங்களில்பாலியல்வழக்குபதிவுசெய்யப்பட்டது.மேலும் கந்துவட்டி புகாரின்பேரில் வடசேரி காவல் துறையினர் காசிமீது கந்துவட்டிவழக்குபதிவுசெய்தனர். அவர் மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காசியை காவல்துறையினர் கைது செய்தனர். காசியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே உடனே உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காசி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகர்கோவில் சிறைக்கு காசிமாற்றப்பட்டார். இந்நிலையில் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையிலிருந்து மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு காசி மாற்றப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சிறைச்சாலை காவலர்களுக்கும் காசிக்கும் இடையே ரகசியகூட்டணி இருந்ததாகவும், காசிக்கு தேவையான பொருள்களை சிறைக்காவலர்கள் அவருக்கு கொடுத்து வந்ததாகவும் அதற்குஈடாக பெரும் தொகையை காசியிடமிருந்து காவலர்கள் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.இந்த புகாரின் அடிப்படையில் காசி மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.