tamilnadu

img

தோழர் ஆனிடெய்சி  காலமானார்

நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜாக்கமங்கலம் வட்டாரக் குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டாரத் தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகியாக செயல்பட்டவருமான தோழர் ஆனிடெய்சி (68) உடல் நலக்குறைவால் புதனன்று மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சி புதனன்று மாலை பாம்பன்விளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் வர்க்க வெகுஜனஅமைப்புகளின் நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினர். தோழர் ஆனி டெய்சி அறிவொளி இயக்க தொண்டராகவும், அறிவியல் இயக்கத்தில்துளிர் இல்லங்கள் வழியாக குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பணியிலும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.