tamilnadu

img

அளக்குடி கொள்ளிடம் ஆற்றுக் கரை ஆய்வு

சீர்காழி, அக்.29- கொள்ளிடம் அருகே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் கொள் ளிடம் ஆற்றின் வலது கரையில் அளக்குடி கிரா மத்தில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சுவர், கடந்த வருடம் ஆற்றில் அதிக அதிக தண்ணீர் வரத்தின் போது 100 மீட்டர் தூரத்திற்கு இடிந்து தண்ணீருக்குள் விழுந்தது. இதில் ஆற்றின் கரை உடைந்தது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நட வடிக்கையால் உடைப்பு தற்காலிகமாக அடைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து உடைப்பு நிரந்தரமாக அடைக்கப்படவில்லை. இந்நிலையில் பருவமழை துவங்கியதையொட்டி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் கரை உடையா மல் கரையை பலப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் அளக்குடிக்கு வந்து ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அரசிடம் இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் கூறினார். பின்னர் ஆட்சியர் பிர வீன்நாயர், அளக்குடியில் உள்ள புயல் மற்றும் வெள்ள  பாதுகாப்பு மையம், தற்காஸ் கிராமத்தில் கிட்டியணை உப்பானாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கத வணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை நீர்  ஆற்றில் அதிகம் வந்தால் எளிதில் வடிய வைக்க அதி காரிகளிடம் ஆலோசனை நடத்தினார். சீர்காழி தாசில் தார் சாந்தி, ஒன்றிய ஆணை யர் சரவணன்,பிடி.ஓ ஜான்சன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர்கள் விவேகா னந்தன், முத்துமணி, ஒன்றிய பொறியாளர் பிரதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்.