சீர்காழி, ஜூலை 29- நாகை மாவட்டம் சீர்காழி அருகே தாண்டவன்குளம் கிரா மத்தில் வேளாண்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாடு துறை கம்பன் கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் 1000 விவசாய தொழிலாளர்களுக்கென்று ரூ.3.5 லட்சம் மதிப்பிலான ஒரு மரச்செக்கு வழங்கப்பட்டு அதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் மரச்செக்கை துவக்கி வைத்தார்.