tamilnadu

10 ஆண்டுகளாக பொது ஏலத்திற்கு விடப்படாத கடைகள்  

 சீர்காழி, ஜூன் 14- கொள்ளிடம் ஒன்றியம் கோபால சமுத்திரம் ஊராட்சியில் 10 ஆண்டு களாக பொது ஏலம் விடப்படாத பெரியார் நாளங்காடி கட்டடத்தின் கடைகளை ஏலம் விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றி யத்தைச் சேர்ந்த கோபாலசமுத்திரம் ஊராட்சிக்குச் சொந்தமான பெரியார் நாளங்காடி கட்டடம், கொள்ளிடம் கடை வீதியில் உள்ளது. இக்கட்டடம் கடந்த 1972 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பொது ஏலத் துக்கு விடப்பட்டு வந்தது. வருடந்தோறும் இக்கட்டடத்தில் உள்ள ஏழு வியாபாரக் கடைகள் பொது ஏலத்துக்கு விடுவதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு வரு வாய் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இக்கடைகள் பொது ஏலத்திற்கு விட வில்லை இது குறித்து கொள்ளிடம் காம ராஜ் மற்றும் வியாபாரிகள் கூறுகை யில், பெரியார் நாளங்காடி கட்டடத்தில் உள்ள கடைகளை ஏலம் விடுவதன் மூலம் கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு கணிச மான வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் கிடைக்காமல் ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. உடனடியாக கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கடைகளை பொது ஏலத்திற்கு விட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி க்கை விடுத்துள்ளனர்.  

;