tamilnadu

கடும் மணல் தட்டுப்பாடு செயற்கை மணலை தமிழக அரசே குறைந்த விலைக்கு தரக் கோரிக்கை

சீர்காழி, ஏப்.13-நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி கிராமங்களில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 4000-த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. இதில் மணல் தட்டுப்பாடு நிலவி வருவதால்பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்-சாண்ட் எனும் செயற்கை மணலை பயன்படுத்தினால் தான் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் எம்-சாண்ட் செயற்கை மணலை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆற்று மணலையே கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மணல் தட்டுப்பாடு காரணமாக செயற்கை மணலை பயன்படுத்த துவங்கியுள்ளனர். எம்-சாண்ட் மணல், திண்டிவனம், கடலூர் மற்றும் சிதம்பரம் ஊர்களில் இருந்து இப்பகுதிக்கு ஒரு லாரிக்கு 4 யூனிட் வீதம் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. 4 யூனிட் எம்-சாண்ட் ரூ.20 ஆயிரத்துக்கு உள்ளது. எனவே எம்-சாண்ட் செயற்கை மணலை அரசே வாங்கி குறைந்த விலைக்கு வாங்கி பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;