சீர்காழி, டிச.21- நாகை மாவட்டம், கொள்ளிடம் சோத னைச் சாவடியிலிருந்து பனங்காட்டாங் குடி கிராமம் வரை கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் போடப்பட்டி ருந்த தார்ச் சாலை மிகவும் மோச மாகி ஜல்லிகள் பெயர்ந்தும் போக்கு வரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாகவும், சாலையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டும் உள்ளதால், கொள்ளிடம் குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கீரங்குடி, கொன்னக்காட்டுப்படுகை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்க ளைச் சேர்ந்த பொதுமக்களும், கொள்ளி டம், சீர்காழி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும் மிகுந்த அவதிய டைந்து வருகின்றனர். இரு சக்கர மோட்டர்பைக் மற்றும் சைக்கிள்களில் செல்லும் மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள் ளாகின்றனர். கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை மிகவும் மோச மாக போக்குவரத்துக்கு பெரும் இடை யூறான சாலையாக இருந்து வருகிறது. கரையோர கிராம மக்கள் இந்த சாலை யால் பெரும் துன்பம் அடைகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த பயனும் இல்லை. எனவே உடனடியாக சாலையை மேம்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி யைச் சேர்ந்த காமராஜ் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.