தரங்கம்பாடி, ஆக.31- நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கண்டித்து செம்பனார்கோவி லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். செம்பனார்கோயில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் செல்வ கலைவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஈழவளவன், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி உரையாற்றினார். மணிவளவன், நெப்பத்தூர் ராஜ்குமார், பிரபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.