தரங்கம்பாடி, ஜூலை 1- மயிலாடுதுறை நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. நாகை மாவட்டம் மயிலாடு துறை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையான வண்டிக்கா ரத் தெருவில் 15 ஆண்டுக்கும் மேலாக சாலையோரம் அமர்ந்தும், தள்ளு வண்டிகளிலும் பழங்கள், காய்கறி கள் உள்ளிட்டவை விற்று வந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை காவல்துறை உதவியுடன் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலை மையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி அடித்து, உடைத்து அராஜகமான முறையில் பொருட்கள் அள்ளிச் சென்று அப்புறப்படுத்தினர். வரி என்ற பெயரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதை தட்டிக் கேட்டதற்காக அப்பாவி வியாபாரி களின் கடைகளை அடித்து நொறுக்கி சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி அள்ளிச் சென்றனர். 150-க்கும் மேற்பட்ட காவ லர்கள் வியாபாரிகளை தாக்கும் சம்பவம் குறித்து அறிந்து அங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கணே சன், வட்டச் செயலாளர் சி.மேக நாதன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ரவீந்திரன், சிறு விற்ப னையாளர் சங்க மாவட்டச் செய லாளர் துரைக்கண்ணு, சங்க உறுப்பினர் சிவராமன் ஆகியோரை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையிலடைத்தனர்.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
தரைக்கடை வியாபாரிகளை தாக்கிய நகராட்சி ஆணையர் மற் றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலை வர்கள் மீது பொய் வழக்கு பதிந்த காவல்துறையை கண்டித்தும் திங்க ளன்று கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் பல்லாயிரக்கணக் கான மக்கள் பங்கேற்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கட்சி அலுவலகத்தி லிருந்து செங்கொடிகளை உயர்த்தி பிடித்து அடக்குமுறைக்கு எதிராக விண் அதிர முழக்கமிட்டு தரங்கம்பாடி சாலை வழியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர், தரைக்கடை வியாபாரிகள், தொழிலாளர்கள் பேரணியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு வந்தடைந்தனர். 200-க்கும் மேற் பட்ட காவலர்கள் தடுப்புகளை வைத்து போராட்டத்தை தடுக்க முயன்று சுற்றி வளைத்த போதும் ஒன்றும் செய்ய முடியாமல் திணறினர். பொய் வழக்கை வாபஸ் வாங்கு, மீண்டும் அதே இடத்தில் தரைக்கடை வியாபாரிகள் கடை களை போட்டுக் கொள்ள அனுமதி, வியாபாரிகளை தாக்கிய நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடு, சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கட்சி யின் மாவட்டச் செயலாளரும், முன் னாள் எம்.எல்.ஏ.,வுமான நாகை மாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.சீனிவாசன், துரைராஜ், ஜீவானந்தம், சிங்காரவேலன் உரை யாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ராயர், ரவிச்சந்திரன், மாரி யப்பன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் சீனி.மணி மற்றும் மாவட்ட, வட்டக்குழு உறுப்பினர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் உடனடியாக தலை வர்கள் மீது போடப்பட்ட வழக்கு களின் பிரிவை மாற்றுவதாகவும், மீண்டும் நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வும் கூறப்பட்டதை தொடர்ந்து போராட் டம் கைவிடப்பட்டது.
(ந.நி.)