tamilnadu

img

50 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சலகர் வீட்டில் இயங்கும் அஞ்சலகம்

 தரங்கம்பாடி நவ.24- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளை யாட்டம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்ச லகர் வீட்டிலேயே அஞ்சலகம் இயங்குவதாகவும், பொது மக்கள் வந்து செல்ல வசதியாக உள்ள மாற்று இடத்தில் அஞ்ச லகத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்டதற்கு பின்னர் திருவிளையாட்டம் கிராமத்தில் அஞ்சலகம் தொடங்கப் பட்டது முதல் பெருமாள் கோவில் தெரு என்றழைக்கப்படுகிற பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலர் வீட்டிலேயே இன்று வரை இயங்கி வருவதால் பொதுமக்கள் எளிதாய் வந்து செல்ல சிரமமாக இருப்பதாகவும், காப்பீட்டு திட்டங்கள், டெபா சிட்டுகள் என ஏராளமான திட்டங்கள் அஞ்சல் துறையில் இருந்தாலும் அதுகுறித்து எதுவுமே பெரும்பாலான மக்க ளுக்கு தெரிவதில்லை. மாற்று இடத்தில் அலுவலகத்தை அமைக்க வேண்டு மென கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இந்திய அஞ்சல் துறைக்கு மனு அனுப்பி இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றஞ்சாட்டு கின்றனர். 30- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாண வர்கள் கல்விப் பெறவும், 10 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இக்கிராமத்திற்கே வர வேண்டும்.  மயிலாடுதுறை, செம்பனார்கோவில், பொறையார் போன்ற பகுதிகளில் பணி செய்வதற்கும், கல்லூரிகளுக்கும், பிற பகுதிகளுக்கும் பேருந்தில் செல்ல திருவிளையாட்டத் திற்கு வந்து தான் செல்ல வேண்டும். எனவே பொதுமக்க ளின் நலன் கருதி அஞ்சலகத்தை தரம் உயர்த்தி நவீனப் படுத்தி கிராமத்தின் கடைவீதியிலோ அல்லது பிற அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;