tamilnadu

img

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும் இருக்காது சிபிஐ வேட்பாளர் எம்.செல்வராஜ் பிரச்சாரம்

நாகப்பட்டினம், ஏப்.2- நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.செல்வராஜ், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இருநாட்கள் நாகை ஒன்றியத்தின் பல பகுதிகளில் வாக்குகள் கேட்டுச் சுற்றுப்பயணம் செய்தார். ஞாயிறன்று, நாகை ஒன்றியம் ஆழியூரிலிருந்து வாக்குச் சேகரிப்புச் சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய செல்வராஜ், தேமங்கலம், சிக்கல், சங்கமங்கலம், பொரவச்சேரி, அந்தணப்பேட்டை, பாப்பாகோயில், மஞ்சக்கொல்லை, ஐவநல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், வடகுடி, தெத்தி, ஆகிய பகுதிகளில் பிரச்சாரச் சுற்றுப்பயணம் செய்தார்.திங்கட்கிழமை அன்று, நாகப்பட்டினம், நாகூர் நகரப் பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அன்று இரவு, நாகூர் தர்காவாசல் முன்பு, ஏராளமான இஸ்லாமியமக்கள் கூடி, வெடிகள் வெடித்து, சால்வைகள் அணிவித்து வரவேற்பளித்தனர்.அப்போது, எம்.செல்வராஜ் பேசும்போது, ‘‘மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. இஸ்லாமியப் பெருமக்களும் மற்றும் அனைவரும், மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் கதிர்அரிவாள் சின்னம் உடைய எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்’’ எனக் கேட்டுப் பரப்புரையாற்றினார்.இந்த இரு நாள் சுற்றுப் பயணத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உருப்பினருமான வி.மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்மாநிலத்தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணீயன், பி.கே.ராஜேந்திரன், பி.டி.பகு, ப.சுபாஷ்சந்திரபோஸ், நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, சு.சிவகுமார், சொ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ராமமூர்த்தி, டி.தினேஷ்பிரபு, எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.தி.மு.க. சார்பில் நாகைத் தெற்குமாவட்டச் செயலாளர் என்.கெளதமன்,கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், நாகை ஒன்றியச் செயலாளர் க.ராஜேந்திரன், இல.மேகநாதன் உள்ளிட்டோரும் மற்றும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கட்சிகளின் நிர்வாகிகளும் பங் கேற்றனர்.

;