tamilnadu

img

சிபிஎம் அரசியல் பயிற்சி முகாம்

நாகப்பட்டினம்: இளம் கம்யூனிஸ்டுகளுக்கு, நாகப்பட்டினம், நாணயக்காரத் தெருவில் உள்ள மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை அன்று  அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.  முகா முக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார்.மாவட்டச் செய லாளர் நாகைமாலி துவக்கி வைத்தார். முதல் அமர்வில் இளம் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன? என்னும் பொருளில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உரையாற்றினார். மாற்றத்திற்கான “எழுச்சி,”  அநீதிகளை எதிர்ப்பதற்கான “கலகம்”, எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பதற்கான “செயல்கள்” ஆகியவற்றையும் இயக்க வரலாற்றையும் இயக்க முன்னோடிகளின் சாதனைகளையும் போதனைகளையும் வெண்திரை ‘ஸ்லைடு’ காட்சிகளோடு எடுத்துரைத்தார். பிற்பகலில், இரண்டாம் அமர்வில் “கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதனைகள் “ என்னும் பொருளில் சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் தென் சென்னை மாவட்டச் செயலாளரு மான ஏ.பாக்கியம் விளக்கவுரையாற்றினார். நிகழ்வில் சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், ப.மாரியப்பன் மற்றும் சிந்தன், வெங்கடேஷ் உட்பட 200க்கு மேற்பட்ட இளம் கம்யூனிஸ்ட் இளைஞர்கள், பெண்கள் பங்கேற்றனர்.