tamilnadu

தேனி மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

நீர்வரத்து குறைந்தது கும்பக்கரையில் குளிக்க அனுமதி

தேனி, ஏப். 30-கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையொட்டி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.கடந்த வாரம் பெய்த கோடை மழையில் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்து வந்தனர்.திங்கள்கிழமை காலையில் அருவியில் நீர்வரத்து குறைந்ததையொட்டி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதியளித்தனர்.அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆனந்த நீராடினர்.


லாரி மீது கார் மோதி  குழந்தை உள்பட 5 பேர் பலி

திருநெல்வேலி, ஏப். 30-நெல்லை அருகே லாரி மீது கார் மோதி குழந்தை உள்பட 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் முருகன்(வயது52). இவர் தனது மருமகன்கள் ராஜசேகர்(35), நிரஞ்சன்குமார்(28), உறவினர் களக்காட்டை சேர்ந்த நம்பி(50), பேத்திதனிகா ஆகியோருடன் காரில் செவ்வாய் கிழமை அதிகாலை ஆலங்குளம்அருகே உள்ள அடைக்கலபட்டினத்துக்கு புறப்பட்டார். காரை ராஜசேகர் ஓட்டினார்.ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு லாரிவந்தது. காரும் லாரியும் திடீரென்று நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.மோதிய வேகத்தில் கார் லாரிக்குள் புகுந்தது. இதனால் காரின் முன்பகுதி லாரியில் சிக்கி நொறுங்கியது.காருக்குள் இருந்த முருகன், நிரஞ்சன்குமார், ராஜசேகர், நடராஜன், குழந்தை தனிகா ஆகிய 5 பேரும்காருக்குள் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியை உலுக்கியது.லாரியின் அடியில் கார் சிக்கியிருந்ததால் பலியானோரை உடனடியாக மீட்க முடியவில்லை. தீயணைப்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி கார் மீட்கப்பட்டது. விபத்தில் பலியானவர்களில் ராஜசேகர் அமெரிக்காவிலும், நிரஞ்சன்குமார் பெங்களூரிலும் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


;