tamilnadu

சிஐடியு போராட்டம் வெற்றி

தேனி:
போடி அருகே சிலமலை ஊராட்சியில்  ஊரக வளர்ச்சி உள்ளாட்சி தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் சார்பில் இரண்டு நாள்வேலைநிறுத்தம்  போராட்டம் நடைபெற் றதைத் தொடர்ந்து இறந்த பெண்  தூய்மைக்காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சியில் பணியின் போது உயிரிழந்த தூய்மைக் காவல் பணியாளர் செல்வராணிக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி சிலமலை ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள், தூய்மைக் காவல் பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து செவ்வாயன்று வட்டார வளர்ச்சி அலுவலர்  தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொழிலாளர்கள் தரப்பில் உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.ஜெயபாண்டி, மாவட்டத் துணைத் தலைவர் ஒண்டிவீரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போடி தாலுகா குழு உறுப்பினர் தங்கபாண்டி. நிர்வாகத் தரப்பில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி செயலர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில்  பணியின் போது இறந்த தூய்மைக் காவல்பணியாளருக்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி நிவாரண தொகை வழங்கப் படுமென நிர்வாகம் உறுதியளித்தது.