tamilnadu

முயல் வேட்டை: 2 பேர் மீது வழக்கு

தேனி, மே 31- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில், திம்மரசநாயக்கனூர், தெப்பத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் கரடி, மான், முயல், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவைகள் வேட்டையாடப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆண்டிபட்டி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏத்தகோவில் மலைப்பகுதி யில் வனத்துறையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போடித்தாசன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிக் குமார் (35), முருகன்(30) என்பது தெரிய வந்தது. வனத்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்தனர்.