tamilnadu

ரேஷனில் தரம் குறைந்த அரிசி வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.. ஐ.பெரியசாமி....

தேனி:
ரேஷனில் தரம் குறைந்த அரிசிவழங்கக் கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியாசமி வியாழனன்று தேனியில் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழவர் கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், “தமிழகத்தில் தட்டுப்பாடின்றி  உரங்கள் வழங்கப்பட்டுவருகிறது . வாழை உள்ளிட்ட பிற விவசாயங்களுக்கும் கூடுதலாக கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வரின் கவணத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்”  என்றார்.

மின்மோட்டார்கள் அகற்றம் ஏன்?
முல்லைப் பெரியாற்று படுகைகளில் உள்ள மோட்டார்கள் அகற்றும் பணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே முல்லைப் பெரியாறு ஆற்றில் வைத்துள்ளமின் மோட்டார்கள் அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இங்கே விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றும் கூறினார்.

142 அடியாக உயர்த்த நடவடிக்கை
நீர்வளத்துறையினர் முல்லைப் பெரியாறு அணையில் சில பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணையின் நீர்வரத்திற்கேற்ப நீர்மட்டத்தை 142அடி உயர்த்துவதற்குதமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். ரேஷனில் அரிசி தரம் குறைந்து இருந்தால் அந்தஅரிசியை வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் கூறினார். இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டஆட்சியர் முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள்  கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார் மற்றும்  அதிகாரிகள் பங்கேற்றனர்.

;